பிரசாந்தின் அந்தாதூன் ரீமேக்கில் இருந்து விலகினார் மோகன்ராஜா

பிரசாந்தின் அந்தாதூன் ரீமேக்கில் இருந்து விலகினார் மோகன்ராஜா

அந்தாதூன் என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்தது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வந்த இந்த திரைப்படம் மிக பயங்கர ஹிட் ஆகி 456 கோடி வசூல் செய்தது. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் நடிகர் தியாகராஜன் இப்படத்தின் உரிமையை வாங்கினார் தனது மகன் பிரசாந்த்தை கதாநாயகனாக ஆக்கி தமிழில் இப்படத்தை ரீமேக்க இருக்கிறார்.

அந்தாதூன் ரீமேக்கிற்கு முதலில் இயக்குனர் மோகன்ராஜா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. இப்போது பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ப்ரெட்ரிக் ஒப்பந்தமாகியுள்ளார்.