அனந்தய்யாவின் மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி

30

ஆந்திராவில் நெல்லூர் அருகே அனந்தய்யா என்ற நாட்டு வைத்தியர் கொரோனாவுக்கு தான் தயாரித்த மருந்தை கொடுத்து வந்தார். இந்த மருந்து கண்ணில் விடக்கூடியது. இந்த மருந்தை கண்ணில் விட்ட சில நிமிடங்களில் ஆக்சிஜன் அளவு அதிகமாகி குணமாகாத கொரோனா நோயாளிகள் கூட விரைவில் மீண்டு விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த மருந்தை வாங்க அனந்தய்யா இருக்கும் சிறிய கிராமத்தில் 50000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராமத்தில் குவிந்தனர். இது மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் தெரிந்த உடன் இவர் கொடுத்து வந்த மருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த மருந்து ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு தற்போது இந்த மருந்தை கொடுக்கலாம் என ஆந்திர அரசு முடிவு செய்து அந்த அனந்தய்யாவின் மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  விஜயகாந்தை விமர்சித்தவர்கள் இன்று கூட்டணிக்கு அலைகிறார்கள் - விஜயபிரபாகரன் விளாசல்
Previous articleசாந்தினி படத்தில் நடிச்சிருக்காங்களா- கஸ்தூரியின் ஆச்சர்ய டுவிட்
Next articleதனுசின் ஜகமே தந்திரம் டிரெய்லர்