ஆனந்தராஜ் வீட்டு திருமணம்

15

ஷண்முகப்பிரியன் இயக்கிய ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தராஜ். ராஜாதி ராஜா, பாட்ஷா என பல படங்களில் வில்லனாக நடித்து, டேவிட் அங்கிள், கவர்மெண்ட் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் ஆனந்தராஜ்.

ஒரு கட்டத்தில் காமெடி வேடங்களிலும் நடித்து வரும் ஆனந்தராஜ், முன்னாள் முதல்வர் ஜெ காலத்தில் இருந்தே, அதிமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தற்போது அவரது மகளுக்கு திருமணம் வைத்திருப்பதால் அந்த அழைப்பிதழை தன் முதல்வர் எடப்பாடியிடம் வழங்கினார்.

இது குறித்து முதல்வரின் டிவிட்டர் பதிவு

இன்று (9.2.2021) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் திரு.எஸ்.ஆனந்தராஜ் அவர்கள் சந்தித்து தனது மகள் திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழ் வழங்கினார் என கூறியுள்ளார்.

பாருங்க:  நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் காற்றழுத்த தாழ்வு