நடிகை எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரின் குழந்தையின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மதராஸ பட்டினம், ஐ, தெறி, 2.O உள்ளிட சில படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த அவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதன்பின் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டி வந்தார்.
இந்நிலையில், அவருக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த உடனேயே அதன் புகைப்படத்தை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையில் குழந்தையுடன், அவரது காதலர் தனது நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரின் ரசிகர்களும், நண்பர்களும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.