cinema news
அம்மன் படங்களை இயக்கி வெற்றிக்கொடி நாட்டிய இயக்குனர்
இன்று ஆடிவெள்ளியாதலால் இவரைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணத்தில் இக்கட்டுரை எழுதப்பட்ட்டது 80, 90களில் பல பக்திப்படங்களை இயக்கிய ராமநாராயணம், இறையருள் இயக்குனர் ஷங்கர் போன்றவர்களை பலருக்கும் தெரியும். ஆனால் இவரை தெரியுமா என்றால் பலருக்கும் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக பெண்கள் சாமி வந்து ஆடும் அளவிலான அம்மன் படங்களான சமயபுரத்தாளே சாட்சி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், மயிலாப்பூர் கற்பகாம்பாளின் பெருமைகளை போற்றும், கை கொடுப்பாள் கற்பகாம்பாள், ஒரே தாய் ஒரே குலம், பதில் சொல்வாள் பத்ரகாளி போன்ற பல அம்மன் படங்களை இயக்கியவர்.
ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே சினிமாவில் அறிமுகமானவர் இவர். ப, நீலகண்டன் இயக்கி கொடுத்து வைத்தவள் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார் , மணிப்பயல் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். ஆர்.எம் வீரப்பன் அவர்களால் தமிழ் சினிமாவில் முன்னிலைப்படுத்தப்பட்டார் இவர்.
மருவத்தூர் கோவிலின் தீவிர பக்தரான ஜெகதீசன் ஓம் சக்தி ஜெகதீசன் என தன் பெயரை டைட்டில் கார்டில் போட்டுக்கொள்வார்.
அம்மன் பக்தி படங்கள் மட்டுமல்லாது மேகத்துக்கும் தாகமுண்டு, ராமராஜன் நடித்த இவர்கள் இந்தியர்கள் போன்ற பக்தி வாடையே இல்லாத படங்களையும் இயக்கியுள்ளார்.