அம்மா உணவகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக சில வாரங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச உணவு இனிமேல் கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலைய அறிவிப்பின் படி 3300 ஐ தாண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக ஆதரவற்றவர்களுக்கும், பிச்சைக் காரர்களுக்கும் மற்றும் ஏழை மக்களுக்கும் உதவும் விதமாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக முதல்வரின் பல இடங்களில் உள்ள 11 அம்மா உணவகங்கள், புற நகரில் உள்ள 4 அம்மா உணவகங்களில் 2 வேளை உணவு இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்றுமுதல் ஊரடங்கு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.