குமரியில் வீடு வீடாக அமித்ஷா பிரச்சாரம்

49

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. வரும் ஏப்ரல் 6ம் தேதி  தேர்தல் வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் களைகட்டி வருகிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் சுற்றுப்பயணம் வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த அமித்ஷா அங்கிருந்து சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் பொன் ராதாகிருஷ்ணனை வெற்றி பெற வைக்க வேண்டும் என அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். சுசீந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாருங்க:  தீபாவளிக்கு வருகிறதா மூக்குத்தி அம்மன்
Previous articleநெஞ்சம் மறப்பதில்லை படத்தின் திகிலூட்டும் புதிய ஸ்னீக் பீக்
Next articleகுக் வித் கோமாளி புகழுக்கு ,சந்தானம் கொடுத்த பரிசு