நடிகர் அமிதாப்பச்சனின் பிறந்த நாள் இன்று. ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் அமிதாப்பச்சன். இவரது மகன் அபிசேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் என குடும்பமே கலைத்துறையில் உள்ளது.
இன்று இவரின் 79வது பிறந்த நாள் ஆகும். இவர் 80 வயதை நெருங்கபோகிறார் என்பது ஆச்சரியமான விசயமாகத்தான் ரசிகர்களுக்கு உள்ளது.ஏனென்றால் சிறு வயது முதல் இவரை பார்த்து ரசித்து வரும் ரசிகர்களுக்கு இவருக்கு 80வயது நெருங்கி விட்டதா என்பது ஆச்சரியமாக இருக்கும்.
இவரது பிறந்த நாளுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின், சுரேஸ் ரெய்னா, விராட் கோஹ்லி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இன்று பிறந்த நாள் என்பதால் அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.