அமித்ஷா கொடுக்கும் விருந்து – டெல்லி செல்லும் தமிழக தலைவர்கள் யார் யார்?

271

பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள அதிமுக பெரிய தலைகளும், அக்கட்சியின் கூட்டணி கட்சிகளும் இன்று டெல்லி செல்ல உள்ளன.

அமித்ஷா கொடுக்கும் விருந்து 01

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும், பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் அதிமுக – பாஜகவுடன் கை கோர்த்தன.

இந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று இரவு பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சி தலைவர்களுக்கு விருந்து கொடுக்கிறார். இதில் கலந்து கொள்ள ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட சில முக்கிய அமைச்சர்கள் டெல்லி சென்றுவிட்டனர். மேலும், ராமதாஸ், தேமுதிக சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், சரத்குமார்,ஜான் பாண்டியன், கார்த்திக் உள்ளிட்ட பலரும் இன்று டெல்லி செல்ல தயாராகி வருகின்றனர். இந்த விருந்தின் போது மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் எந்தெந்த கட்சிக்கெல்லாம் பதவி கிடைக்கும் என்பதும் இன்றைய விருந்தில் தீர்மானிக்கப்படும் எனக்கூறப்படுகிறது

பாருங்க:  கமல் லோகேஷ் கூட்டணி புதிய படத்தின் டீசர் தேதி அறிவிப்பு