உளவுத்துறை அறிக்கை கேட்டு அதிர்ந்த அமித்ஷா – ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை?

204
உளவுத்துறை அறிக்கை கேட்டு அதிர்ந்த அமித்ஷா

பாஜக தனது ஆட்சியை அமைக்க திமுக தரப்பிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானாலும், பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது, மேலும், தொங்கு பாராளுமன்றமே அமையும் மத்திய அரசுக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என திட்டமிடும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மற்ற கட்சிகளிடம் பேசி வருகிறாராம்.

தமிழகத்தை பொருத்தவரை 38 இடங்களில் திமுக 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு வெளியானது. 34 இல்லை என்றாலும் அதிகமான தொகுதிகளை திமுக பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாஜகவிற்கு வெளியில் இருந்தாவது ஆதரவு அளிக்கும் படி திமுக தலைவர் ஸ்டாலினிடம் அமித்ஷா கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால், ஸ்டாலின் நேர்மறையான பதில் எதுவும் கூறவில்லையாம். தேர்தல் முடிவு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியாவிடில், வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க மத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு இடம் கொடுக்க ஸ்டாலின் கண்டிஷன் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  ஏப்ரல் 18 தேர்தல் - தமிழகத்தில் பொது விடுமுறை!