Connect with us

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

cinema news

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

உலகம் முழுவதும் தற்போது வெப் சீரிஸ்தான் புகழ்பெற்று வருகிறது. மிக நீண்ட கதையை விரிவாக விளக்கமாக சொல்வதே வெப்சீரிஸ் .

இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெப் சீரிஸ்கள் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் மிஸ் மார்வெல் எனும் வெப்சீரிஸ் புகழ்பெற்று  விளங்குகிறது.

இந்த வெப் சீரிஸின் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினிகாந்த் நடித்த படத்தின் பாடல் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஓ நண்பா என்ற இந்த பாடலை ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் இடம்பெற்றுள்ளது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடிய இந்த பாடலை வைரமுத்து எழுத ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஜினி நடித்து தோல்வியை தழுவிய படமான  இப்படத்தின் ஓ நண்பா என்ற இந்த பாடலை படக்குழுவினர் அனுமதியோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்பாடல் சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in cinema news

To Top