Latest News
அமெரிக்க துணை ஜனாதிபதி ஊரில் வெற்றி கொண்டாட்டம்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜோபைடன். இவர் நேற்று அதிபராக பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் துணை அதிபராக தமிழ்நாட்டின் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு அந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இவரது தாய் வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர்கள். முன்னதாக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், அவர் வெற்றி பெற்றபோதும் இந்தக் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிலையில் துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது மூதாதையர் வழிபட்ட அவரது குலதெய்வக் கோயிலான தர்மசாஸ்தா கோயிலில் பொதுமக்கள் நேற்று வழிபாடு செய்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.