அமெரிக்காவின் பிரபல நடிகர் பலி

53
அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் மே 29 ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர்.
ஆனால் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரி ஏரியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோரும் அடங்குவர்.
1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சன் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக லாரா நடித்திருந்தார். பின்னர் அவர் 1996-1997 வரை வெற்றிகரமாக ஓடிய “டார்சன்: தி எபிக் அட்வெஞ்சர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதுதான் அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக அமைந்தது.
இவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா, ‘வெயிட் டவுன் மினிஸ்டீஸ்’ என்ற உடல் எடை குறைப்பு தொடர்பான பயிற்சிக் குழுவின் தலைவர் ஆவார். 1986 இல் அந்த குழுவை நிறுவினார். பின்னர் 1999ல் டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவினார்.
கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்தை நிர்வகித்து வந்த நிலையில் இருவரும் விமான விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாருங்க:  ஒ.பி.எஸ் மகன் வெற்றிக்கு மோடி உதவினார் - இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டு
Previous articleஅமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீஸ் தீவிரம்
Next articleசாந்தினி படத்தில் நடிச்சிருக்காங்களா- கஸ்தூரியின் ஆச்சர்ய டுவிட்