பிரபல தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, திருபாய் அம்பானியின் வாரிசுகளான இவர்கள்தான் இந்திய பொருளாதார ரீதியான அனைத்து நல்லவை கெட்டவைக்கும் காரணம் என பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒரு பேச்சு எப்போதுமே உள்ளது.
பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் இவர்கள்தான் காரணம் எனவும் மக்களிடம் எப்போதும் ஒரு பேச்சு உள்ளது.
இது ஒரு புறம் இருக்க மும்பையில் உள்ள அம்பானியின் சொகுசு பங்களா அருகே ஒரு மர்மமான கார் நின்றுள்ளது. அதை சோதனை செய்த போலீசார் உள்ளே மர்மமான பொருட்களை கைப்பற்றினராம்.
இதனால் முகேஷ் அம்பானியின் உயிருக்கு எதுவும் ஆபத்து நேர்ந்து விடுமோ என பதட்டத்தில் போலிசார் உள்ளனர் இதனால் பரபரப்பும் ஏற்பட்டது.