ரஜினியின் மிகப்பெரிய வெற்றி படமான படையப்பா அமேசான் ப்ரைம் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களுக்கு சினிமா தாண்டியும் ஒரு வியாபார தளமாக தற்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் உருவாகி வருகின்றன. படங்களை அந்நிறுவனங்களுக்கு கொடுப்பதன் மூலம் ஒரு கணிசமான தொகையை தயாரிப்பாளர்கள் பெற்று வருகின்றனர்.
புதுப்படங்களுக்கு மட்டுமில்லாமல் பழைய வெற்றி பெற்ற படங்களையும் இப்போது இந்நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2000ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படமும் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த படத்தை அமேசானில் வெளியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் உரிய அனுமதி கோரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேசான் தளத்திலிருந்து ‘படையப்பா’ நீக்கப்பட்டுள்ளது. மேலும் படங்களை ஆன்லைன் தளங்களுக்கு வழங்க சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. திடீரென படையப்பா திரைப்படம் அமேசான் வீடியோவிலிருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.