முன்பெல்லாம் கிராமத்து டெண்ட் கொட்டாயில் உட்கார்ந்து முறுக்கு வாங்கி தின்று கொண்டு படம் பார்ப்பார்கள் 80ஸ் கிட்ஸ். அந்த காலம் எல்லாம் மலை ஏறி மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் வந்தன.
இப்போது அவற்றையும் மீறி நீ வீட்லயே இருந்து புதுப்படம் பார்த்துக்கொள் என்ற அடிப்படையில் அமேசான், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் வந்து விட்டன.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வேறு வந்து விட்டதால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மக்களின் மனதை கவர ஓடிடி தளங்கள் அதிகம் வந்து விட்டன.
அதிலும் சில வருடங்களாக அமேசான், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட தளங்கள் தமிழ் சினிமாக்களை ஓடிடியில் கொண்டு வந்து தமிழில் சக்கோ போடு போடுகின்றன.
வரும் காலத்திலும் தங்கள் தொழிலை மேம்படுத்தும் விதமாய் இந்த நிறுவனம் இந்திய தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் 400 கோடி ரூபாய் பிரமாண்ட ஒப்பந்தம் இட்டுள்ளனவாம்.
இனிமேல் வரும் பெரும்பாலான படங்களை இவர்களின் ஓடிடி தளத்தில்தான் பார்க்க வேண்டி வரும் என நினைக்கிறேன்.