Connect with us

Latest News

அமேசான் ப்ளிப்கார்டில் வேலை- மோசடியை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை

அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாப்பி, லசாடா, போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும்,  7 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வருகிறது. இந்த மெசேஜ் லிங்கை அழுத்தினால் உடனடியாக honey மற்றும் making என்ற செயலி பதிவிறக்கம் ஆகிறது. பின்னர் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மூலமாக பொதுமக்களுக்கு மோசடி நபர்கள் அறிவுரை வழங்கி அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள். முதற்கட்டமாக போனஸ் தொகை 101 ரூபாயும் மோசடி நபர்கள் அனுப்பி, அந்த ஆப் மூலமாக குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுகிறார்கள். அதற்கான கமிசன் தொகையும் பயனாளருக்கு கிடைக்கும் என நம்ப வைக்கிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பலர் மோசடி நபர் அளித்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி பொருளை வாங்கி விற்றுள்ளனர். ஆனால் கமிஷன் தொகையானது பயனாளரின் வங்கிக் கணக்கிற்கு வராமல் ஆப்பில் மட்டுமே இருப்பதாக காட்டப்படும். மேலும் மோசடி நபர்கள் கொடுக்கும் டாஸ்கை முழுவதுமாக முடித்தால் மட்டுமே தங்களது வங்கி கணக்கிற்கு பணம் வரும் என நம்ப வைத்து பின்னர் செலுத்திய பணத்தை மோசடி செய்வதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த மோசடியில் பொதுமக்கள் பலர் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர்.எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்க வேண்டாம் எனவும் உடனடியாக ஹனி மற்றும் மேக்கிங் என்ற செயலியை செல்போனில் இருந்து அழிக்குமாறு சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். குறுகிய காலகட்டத்தில் அதிக பணம் சம்பாதிக்களாம் என வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியோ விளம்பரத்தையோ நம்ப வேண்டாம் என சென்னை காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாருங்க:  வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி - வீட்டில் 2 வது மனைவியுடன் கணவன் - காவல் நிலையத்தில் பஞ்சாயத்து

Latest News

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

டெல்லியில் உள்ளது புகழ்பெற்ற ரோகிணி கோர்ட். இந்த கோர்ட் வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர்.

இங்குள்ள கோர்ட் எண் அறை 207 அருகே பரபரப்பாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அனைவரும் சிதறி ஓடினர்.

முழு தகவல் கிடைக்காத நிலையில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையை போக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவனுடன் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாருங்க:  ஊரடங்கை மதிக்காமல் ஊரை சுற்றிய மக்கள்! காவல்துறையின் வழக்குப்பதிவு விவரங்கள்!!
Continue Reading

Latest News

தனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்

ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமாக விளங்கிய என்.டி ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் இவரின் படங்களுக்கு என ஆந்திராவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகராக தெலுங்கு திரையுலகில் விளங்கும் ஜூனியர் என் டி ஆர் ஒரு லம்போகினி கார் வாங்கியுள்ளார்.

இந்த காரின் மதிப்பு ரூ 3 கோடி. இந்த காருக்காக 9999 என்ற பேன்சி நம்பரை வாங்கியுள்ளார், இந்த நம்பருக்காக அவர் 17 லட்சம் செலவு செய்துள்ளாராம்.

பாருங்க:  ஏப்ரல் 13 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Continue Reading

Latest News

தமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா

தமிழக அரசுக்கு சொந்தமாக வெளியூர் செல்லும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.

கடந்த மே மாதத்தில் இருந்து கொரொனா தொற்று காரணமாக லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் பஸ்கள் இயங்கவில்லை. பின்பு பஸ்கள் சிறிது சிறிதாக இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் வெளியூர் செல்ல ஏசி பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஏசி பேருந்துகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

பாருங்க:  இது யார் என்று தெரிகிறதா
Continue Reading

Trending