கொரோனா விதிமுறைகளை மீறிவிட்டதாக பிரபல நடிகர் மீது வழக்கு

கொரோனா விதிமுறைகளை மீறிவிட்டதாக பிரபல நடிகர் மீது வழக்கு

கொரோனா வந்தது முதல் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கென அரசு தனியாக சில சட்டங்களை போட்டுள்ளது. அதில் முக்கியமானது சமூக இடைவெளி இதுதான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது. ஆந்திராவில்  கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் தெலங்கானா  முதல்வர் சந்திரசேகர்ராவ் அனுமதி வழங்கினர்.

இந்நிலையில் புஷ்பா என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் அல்லு அர்ஜூன் ஆந்திராவில் உள்ள குண்டாலா என்ற நீர்வீழ்ச்சிக்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார்.

இது தவறானது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஆதிலாபாத் நேரேட்டிகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, அதன் பின்னர் வழக்கு பதிவு செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.