திருப்பதி அலிபிரிமலைப்பாதையில் சுங்க கட்டணம் உயர்வு

15

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்த கோவிலுக்கு கார்களில் செல்லும் பிரதான பாதைதான் அலிபிரி மலைப்பாதை இந்த பாதையில் செல்வதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சுங்க கட்டணத்தை தேவஸ்தான நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

புதிய கட்டணத்தின்படி ஜீப், காருக்கு ரூ.15லிருந்து ரூ.50 ஆகவும், மினி லாரிக்கு ரூ.50லிருந்து ரூ.100 ஆகவும், ஜேசிபி மற்றும் அதிக சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ரூ.200 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளைப் போல், திருப்பதி-திருமலை இடையேயும் ஃபாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சிங்கிள் டிராக்கில் மட்டும் சோதனை அடிப்படையில் நேற்று முதல் ஃபாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டது.

பாருங்க:  திருப்பதி தேவஸ்தான சொத்துகளை ஏலம்விட தடைவிதித்த - ஆந்திர அரசு!
Previous articleஉலக சுகாதார நிறுவனத்துக்கு கமல் கண்டனம்
Next articleபுகை பிடிக்கும் ரசிகரை திருத்திய யுவன்