அலிபிரி பாதை வழியாக திருப்பதி செல்ல தடை

54

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து இங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர். இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாகவும் பக்தர்கள் செல்வது வழக்கம்.

திருப்பதி செல்வதற்கு அலிபிரி பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்வார்கள்.இந்த நிலையில் அலிப்ரி பாதையின் மேற்கூரை சீரமைப்பு பணி சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதியில் இருந்து ஜூலை 1 ம் தேதி வரை 1 மாத காலத்துக்கு இப்பாதையை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள்
Previous articleஆன்லைன் வகுப்புகள்- முதல்வர் எச்சரிக்கை
Next articleஅச்சமுண்டு அச்சமுண்டு பட இயக்குனரின் கோபம்