Connect with us

தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!

tasmac

Corona (Covid-19)

தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!

பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17  நீட்டிக்கப்பட்டாலும் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நேற்று முதல்நாள் கடையை திறந்து தமிழக அரசு 176 கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது. இதற்கே சென்னையில் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் இன்னும் கடை திறக்கப்படாததால் தமிழகத்தில் இருந்து அங்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின. சாதாரண நாட்களில் விலைக் கம்மியாக இருப்பதால் பாண்டிச்சேரியில் இருந்துதான் தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படும். ஆனால் இப்போது கொரோனாவால் இந்த வழக்கம் மாறி தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்பட்டுள்ளது.

More in Corona (Covid-19)

To Top