கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மது அருந்துவதால் மறைமுகப் பிரச்சனைகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி என்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் உலகின் பெருவாரியான நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் பெரும்பாலான நாடுகளில் மது கிடைக்காமல் குடிமகன்கள் அல்லல் பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மது அருந்தினால் கொரோனா பரவாது என சில வதந்திகள் பரவி வருகின்றன. இதை மறுக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கின்போது, மது குடிப்பதால், பிரச்ச்னைகள், வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சமூக விலைகளைக் கடைபிடிக்காமல் கொரோனா தொற்று ஏற்படும் என எச்சரித்துள்ளது.