நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இரண்டு வருடங்கள் முன் வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹெச்.வினோத்.
இந்த படம் வந்ததில் இருந்தே இயக்குனர் ஹெச்.வினோத்தை தன் ஆஸ்தான இயக்குனராக அஜீத் வைத்துக்கொண்டார்.
அதன் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்தார் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அதே ஹெச்.வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார்.
வலிமை படத்தை தயாரித்த போனிகபூரே இப்படத்தையும் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படம் பேங்க் கொள்ளையை முழுக்க முழுக்க கொண்ட கதைக்களமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
நல்லவனும் இல்லாமல் கெட்டவனும் இல்லாமல் இரண்டு கலந்தது போல ஒரு கதாபாத்திரத்தில் அஜீத் இப்படத்தில் நடித்துள்ளாராம்.
இப்படம் வரும் தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனிடையே படத்தின் பூஜை குறித்த புகைப்படத்தினை இயக்குனர் ஹெச்.வினோத் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை வெளியிட்டுள்ள ஹெச் வினோத் படம் பேசும் என குறிப்பிட்டுள்ளார்.