துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜீத்

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜீத்

அஜீத் நடிகராக மட்டுமல்லாது விளையாட்டு போட்டிகள், கார் ரேஸ், பைக் ரேஸ் என பலவற்றிலும் கலந்து கொள்வார். சர்வதேச கார் பந்தயங்களில் கூட அடிக்கடி கலந்து கொள்வார். இதனால் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவை போல அவர் மீண்டு வருவார்.

தற்போது அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஒரு  ஆண்டுக்கு முன் அவர் டெல்லியில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் கூட கலந்து கொண்டது உண்டு.

இந்நிலையில் தமிழ்நாடு அளவில் நடந்த 46வது  ஷூட்டிங் சேம்பியன்ஷிப் காம்பெடிசனில் கலந்து கொண்ட அஜீத் தங்கபதக்கம் வென்றார்.