சிறிய நடிகர்களா? அஜீத் விஜய்க்கு சொம்படிக்காதீர்கள்-ப்ளூ சட்டை மாறன்

சிறிய நடிகர்களா? அஜீத் விஜய்க்கு சொம்படிக்காதீர்கள்-ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன் என்றாலே எப்போதும் சர்ச்சைதான். இவரின் கருத்துகள் எப்போதும் அனலாக இருக்கும். யாரையாவது தாக்குவது போல இருக்கும்.

இவரின் விமர்சனங்களை சொல்ல வேண்டிய தேவையே இல்லை. எல்லாருக்கும் தெரிந்த ஒரு விசயம்தான். விமர்சனம் என்ற பெயரில் அனைத்தையும் பெயர்த்து எடுத்து விடுவார்.

அடிமட்டம் வரைக்கும் அலசி ஆராய்ந்து இவர் போடும் விமர்சனங்கள் எல்லா தரப்பு ரசிகர்களிடத்தும் கோபத்தை ஏற்படுத்த தவறவில்லை.

இந்நிலையில் திடீர் என அஜீத், விஜய்க்கு ஆதரவு போல ப்ளூ சட்டை மாறன் டுவிட்டரில் எழுதியுள்ள கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய நடிகர்கள் எல்லாம் அஜித், விஜய் போன்ற நடிகர்களில் யாரேனும் ஒருவருக்கு சொம்படித்து அதில் வளர நினைத்தால் ரசிகர்கள் ஏமாற மாட்டார்கள். சிவாஜி, MGR, ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்தி, தனுஷ், விஜய சேதுபதி உள்ளிட்டோர் உழைப்பு மற்றும் திறமையால் மட்டுமே உயர்ந்தவர்கள்.