சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் அஜீத் பிறந்த நாள்

12

இன்று பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் அனைத்தையும் கலக்கி கொண்டிருக்கும் மந்திரச்சொல் அஜீத் அஜீத் அஜீத் இந்த வார்த்தைகளே இன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

அமராவதி படத்தின் மூலம் அறிமுகமாகி எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனியான ஒரு மனிதனாக இவ்வளவு மாஸ் ஹீரோவாக வளர்ந்து இன்று பல லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்தான் அஜீத்குமார்.

காதல் கோட்டை, வாலி, ஆசை என ஆரம்பகால படங்கள் இவரது கிராஃபை ஏற்றி விட, முகவரி, அமர்க்களம், சிட்டிசன் என அடுத்தடுத்து அடித்து ஆட தொடங்கினார்.

தீனா படம் மூலம் தல என்ற பட்டம் கிடைத்தது. இவருக்கு இருக்கும் அளவு வெறித்தன ரசிகர்கள் தமிழ் சினிமாவில் தற்போதைய நிலையில் யாருக்கும் கிடையாது.

இவரது படம் வெளிவந்தால் இவரது ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே வைக்கும் பேனர்களை பார்த்தாலே மலைப்பாகி விடும்.

இவ்வளவு அட்ராசிட்டி ரசிகர்களை கொண்ட ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் அவர்களின் பிறந்த நாளை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

பாருங்க:  குழப்பத்தில் விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர்
Previous articleவாக்கு எண்ணிக்கை முக.ஸ்டாலினின் வேண்டுகோள்
Next articleதல அஜீத்துக்கு சிவகார்த்திகேயன் பிறந்த நாள் வாழ்த்து