அஜீத் உதவி செய்வதாக சொல்வது பொய்- அங்காடி தெரு நடிகை குமுறல்

25

பொதுவாக சமூகவலைதளங்களை திறந்தால் அஜீத் அவருக்கு உதவி செய்தார் இவருக்கு உதவி செய்தார் போன்ற அப்டேட்டுகள் அன்லிமிட்டெட் ஆக இருக்கும். அஜீத் உதவி செய்த செய்திகளை பார்த்தும் கேட்டும் பழகிப்போனோர் ஏராளம்.

இதை உணர்ந்து எளிய நிலையில் கஷ்டப்படும் பல சினிமா கலைஞர்கள் அஜீத்தின் உதவியை தேடுகின்றனர். சமீபத்தில் கூட ரேணிகுண்டா உள்ளிட்ட படங்களில் நடித்த தீப்பெட்டி கணேஷ் கால் நடக்க முடியாத பிரச்சினை காரணமாக கஷ்டப்பட்டதால்  அஜீத் உதவி செய்ததாக கூறப்பட்டது.

அப்படி எல்லாம் இல்லை என்கிறா அங்காடி படத்தில் நடித்த சிந்து என்கிற நடிகை இந்த படத்தில்  விலைமாதுவாக இருந்து அதன்பின்னர் நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அந்த குள்ள வியாபாரியை போலவே குழந்தையை பெற்றெடுத்து குள்ள அதற்கான தத்துவத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

இவர் மார்பகபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பணம் தேவை என்று அஜீத்தின் மானேஜர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டுள்ளார் பலமுறை தொடர்பு கொண்டும் அவரை ரீச் செய்ய முடியவில்லை என கூறிவிட்டாரம் சுரேஷ் சந்திரா.சுரேஷ் சந்திராவுக்கு வேண்டிய ஒரு திரையுலக நபரையும் வைத்து சிந்து தொடர்பு கொண்டாராம் கடைசி வரை அஜீத்தை பிடிக்க முடியவில்லை என்றுதான் பதில் வந்ததாம். இது போல் நடிகர் சங்கத்தலைவரான விஷாலும் நான் எதற்கு உதவி செய்யணும் ஐசரி கணேஷை பார்க்க சொல்லுங்க என சொல்லிவிட்டாராம். நடிகர் கார்த்தி மட்டும் தன் சொந்த பணம் 20000 கொடுத்தாராம். இப்படியாக அஜீத் உதவி செய்யவில்லை என்ற விரக்தியில் சிந்து பேசியுள்ளார்.

பாருங்க:  இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது  - சூர்யா பொறுப்பான வீடியோ !

https://youtu.be/d8j1t2GOn60