இந்த வருடம் இதுவரை எடுத்த கணக்கில் டிவிட்டரில் ‘விஸ்வாசம்’ என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் #viswasam என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த வருடத்திலேயே, அதாவது விஸ்வாசம் திரைப்படம் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஏராளமான பதிவுகளை இட்டிருந்தனர். எனவே, கடந்த வருடம் விஸ்வாசம் ஹேஷ்டேக்கே முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில், தற்போது இதுவரையிலான கணக்கெடுப்பில் விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மீண்டும் #Viswasam என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.