cinema news
அஜீத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு- இயக்குனர் செல்வமணியின் வருத்தம்
அஜீத் நடித்த வலிமை படத்தின் பல காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. வலிமை படம் வெளிவந்து சில நாட்களிலேயே அஜீத்தின் அடுத்த படமும் தொடங்கப்பட்டது.
அஜீத்தின் அடுத்த படத்தையும் முந்தைய படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார், வலிமை படத்தை இயக்கிய வினோத்தே இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கிடையே தமிழக பெப்சி தலைவராக இருக்கும் ஆர்.கே செல்வமணி இது குறித்து கூறியது என்னவென்றால்
அஜீத் தொடர்ச்சியாக ஐதராபாத்திலேயே படப்பிடிப்பு நடத்துவதால் இங்குள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தவும் இந்த கோரிக்கையை அஜீத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.