டுவிட்டரில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாசிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர் அதற்கு அவர் பதில் சொல்லி வருகிறார். அப்படியாக ஒரு கேள்விக்கான பதிலில் நடிகர் அஜீத் பற்றி புகழ்ந்து சொல்லியுள்ளார் ஜி.வி.
எனது முதல் படமான வெயில் முடிந்தவுடன், ஒப்பந்தமான படம் கிரீடம் தான். அவ்வளவு பெரிய ஸ்டார் ஒரு படம் முடித்த உடன் என்னை மாதிரியான இசையமைப்பாளருக்கு உடனே வாய்ப்பு கொடுத்தார் அஜித் சார். அந்தப் படத்தில் உள்ள பாடல்கள் இன்றளவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித் சார் ஒரு சிறந்த நல்ல மனிதர் என ஜிவி அஜீத்தை புகழ்ந்துள்ளார்.