cinema news
ஊரடங்கு நாளிலும் ஓயாத விஜய் vs அஜித் ரசிகர்கள் சண்டை!
ஊரடங்கை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகாத நிலையில் அதை கலாய்க்கும் விதமாக விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வர இருக்கும் நிலையில் அன்று “மாஸ்டர்” ரிலீஸ் ஆகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க இப்போது விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே சண்டை உருவாகியுள்ளது.
இந்த தகராறில் #June22BlackdayForVijay என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட்டை அஜித் ரசிகர்கள் ட்ரண்ட் செய்ய அதற்குப் போட்டியாக அஜித்தின் பிறந்தநாளான மே 1 முன்னிட்டு #மே1அஜித்குபாடைகட்டு என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்துள்ளனர். இரு தரப்பினரும் பொதுவெளி என்பதை மறந்து எல்லை மீறி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.