cinema news
அஜய் தேவ்கன் சுதீப்பின் வாதங்கள்- கங்கணா ரணாவத் புதிய கருத்து
அஜய் தேவ்கன் ஹிந்தியின் பிரபலமான நடிகர் இவருக்கும் பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப்புக்கும் இடையில் இரண்டு நாட்களுக்கு முன் டுவிட்டரில் கடுமையான சொற்போர் வாதம் நடந்தது.
ஹிந்தியை திணிப்பதாக சொல்லும் நடையில் கிச்சா சுதீப் பேச, ஹிந்திதான் தேசிய மொழி அது தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அஜய் தேவ்கன் பேச இருவருக்கும் இடையிலான வாதம் நிற்க நீண்ட நேரமானது.
இந்த நிலையில் இவர்களின் கருத்து உரையாடல் கருத்து கூறிய நடிகை கங்கணா ரணாவத், இருவர் மீதும் அவரவர் பக்கம் நியாயம் உள்ளது. ஹிந்தியும் இல்லை மற்ற மொழிகளும் இல்லை சமஸ்கிருதம் தான் தேசிய மொழி மிகப்பழமையான மொழியான சமஸ்கிருதம் ஏன் தேசிய மொழியாக இருக்க கூடாது என கங்கணா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.