காய்ச்சலுக்காக டாக்டரிம் போனேன்.. ஒரு லட்சம் பிடுங்கிட்டாங்க – ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

218

மருத்துவமனைக்கு சென்றால் பல பரிசோதனைகளை செய்து பணத்தை பிடுங்கி விடுகிறார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இளம் இயக்குனர் பாஸ்கர் இயக்கியுள்ள ‘மெய்’ திரைப்படம் மருத்துதுறையில் உள்ள முறைகேடுகள் குறித்து பேசுகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ மருத்துவ துறையில் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஒரு முறை காய்ச்சலால் அவதிப்பட்டு மருத்துவமனை சென்றேன். அங்கிருந்த மருத்துவர்கள் என்னை பல பரிசோதனைகள் செய்ய வற்புறுத்தினர். இறுதியில் மருத்துவ கட்டணமாக ரூ. 1 லட்சத்தை செலுத்தி விட்டு வந்தேன். அதாவது ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சத்தை செலவு செய்தேன். எனவேதான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என அவர் பேசியுள்ளார்.

பாருங்க:  37 வருடங்களுக்கு பிறகு சசிக்குமார் நடிப்பில் மீண்டும் முந்தானை முடிச்சு