இந்தியன் 2 விலிருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்…..

189

இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.

பல பஞ்சாயத்துகளுக்கு பின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சு வார்த்தை நடந்தது.

ஆனால், இப்படத்தில் நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் உறுதி செய்யாமல் இருந்தார். இந்நிலையில், படக்குழு கேட்ட கால்ஷீட்டை கொடுக்க முடியாமல் அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

பாருங்க:  பெயர் மாறும் வர்மா - புதிய தலைப்பு அறிவிப்பு!