ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் மலையாள திரைப்படம்

6

தமிழில் சில பல வருடங்களுக்கு முன் வந்து இன்று வளர்ந்து விட்ட நடிகையாகி விட்டவர் ஐஸ்வர்யா ராஜேஸ். வந்த சமயத்திலேயே காக்கா முட்டை போன்ற படத்தில் கதாநாயகி வேடத்தை துறந்து கதையின் நாயகியாக தாய் வேடத்தில் எல்லாம் நடித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி விட்ட ஐஸ்வர்யா ராஜேஸ் தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார்.

மலையாளத்தில்  ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த படம், தி  கிரேட் இந்தியன் கிச்சன். திருமணமான இளம் பெண், ஆணாதிக்கம் நிறைந்த  கணவனிடமும், அவனது குடும்பத்தினரிடமும் சந்திக்கும் பிரச்னைகளும், பிறகு  அந்தப் பெண் எடுக்கும் முடிவுகளும்தான் கதை. கடந்த ஜனவரி 15ம் தேதி  ஓடிடியில் வெளியான இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்  ஆகிறது. அதற்கான உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். அவரது  இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடித்திருந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் அவரே நடிக்கிறார்.

பாருங்க:  ஏப்ரல் 03 - கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்