நேற்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எய்ட்ஸ் நோய் அதிக பேரை கொல்லும் ஆட்கொல்லி நோயாக இருந்தது. முறையற்ற உடலுறவு, எய்ட்ஸ் வந்தவரின் ரத்தம் மற்றொரு ரத்தத்துடன் கலப்பது போன்றவற்றால் எய்ட்ஸ் நோய் பரவியது கட்டுப்படுத்த முடியாமலும் போனது.
தற்போது எய்ட்ஸ் நோயை பெருமளவு கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி நடிகை சிம்ரன் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று உலக எய்ட்ஸ் தினம் .. நாம் அனைவரும் களங்கத்தைத் தடுத்து, இந்த கொடிய நோயை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க உதவுவோம். உலகளாவிய தொற்றுநோயுடன், எச்சரிக்கையாக இருப்பது மிக முக்கியமானது. எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை நீங்கள் அறிந்தால், பரிவுணர்வுடன் இருங்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் என சிம்ரன் கூறியுள்ளார்.