இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாமல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே, அதிபர் கோத்தபய ராஜபக்ஷே திணறி வருகின்றனர்.
இவர்கள் பதவியும் விலகாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கையினரை தள்ளி உள்ளனர்.
10 ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தாறுமாறாக விலை ஏறி 100 ரூபாய் வரையும் விற்கிறது.
அத்தியாவாசிய பொருட்கள் விலை அதிகம் ஒரு புறம் இருந்தாலும் அதுவும் சரியான முறையில் கிடைக்காமல் இருப்பது மிகப்பெரும் கஷ்டத்தை இலங்கை மக்களுக்கு கொடுத்து வருகிறது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், போன்றவைக்கும் கடும் தட்டுப்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கை பகுதி மக்கள் அங்கிருந்து பிழைப்பு தேடி அகதிகளாக தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதிக்கு வர தொடங்கி இருக்கின்றனர்.
நேற்று முதன் முறையாக 5 பேர் வந்த நிலையில் இன்றும் 10 பேர் அகதிகளாக வந்து இருக்கின்றனர்