Latest News
கொடூர சூழலில் ஆப்கன் ஐநா கவலை
ஆப்கானிஸ்தான் நாட்டை ஒரு காலத்தில் தாலிபான்கள் ஆண்டு வந்தனர். தாலிபான்கள் பழமைவாதத்தை வைத்து ஆட்சி நடத்தினர் மக்களை கொடுமைப்படுத்தினர். அல்கொய்தாவின் பின்லேடனுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். 2011ல் அமெரிக்காவில் நடந்த டுவின் டவர் தாக்குதலை ஓசாமா பின்லேடன் நிகழ்த்தினான் அதன் பிறகு ஓசாமா தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தானை அமெரிக்க படைகள் தங்கள் கைவசம் கொண்டுவந்தன.
அங்கு மக்களாட்சி மலர பாடுபட்டன. ஹமித் கர்சாய் தலைமையில் முதல் முதலில் அங்கு மக்களாட்சி அமைக்கப்பட்டது.
20 வருடங்கள் ஆகிவிட்டதால் சமீபத்தில் அமெரிக்க படைகள் தங்கள் படைகளை ஆப்கனில் இருந்து விலக்கி கொண்டது இதனால் உஷாரடைந்த தாலிபான்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழைந்து ஆட்சியை கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் ஆப்கனில் உள்ள 97 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே சென்று உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவர் என கவலை தெரிவித்துள்ளது.