Latest News
ஆப்கனை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க கூடாது-மற்ற நாடுகள் எச்சரிக்கை
ஆப்கானில் தாலிபான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் ஆப்கனை முழுவதும் கைப்பற்றிய தாலிபான்கள் 20 வருடம் முன்பு இருந்த பழமைவாத கொடூர ஆட்சிக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.
இதனால் நாட்டை விட்டு பலரும் ஓடி வருகின்றனர். அப்படி நாட்டை விட்டு செல்வதற்காக காபூல் விமான நிலையம் வரும் பலரையும் துப்பாக்கி முனையில் தாலிபான்கள் விரட்டியடிக்கின்றனராம்.
இதனால் 90 உலக நாடுகள் கூட்டாக சேர்ந்து அப்படி செய்யக்கூடாது நாட்டை விட்டு செல்பவர்களை விட வேண்டும் துன்புறுத்தக்கூடாது என தாலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காபூல் விமான நிலையம் வரும் மக்களை தாலிபான்கள் விரட்டியடிப்பதாக கூறப்படுகிறது.