ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றவும் மீண்டும் பழமைவாதத்துக்கு சென்று வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் பிரபலமான பாடகர் ஒருவர் இன்று கொல்லப்பட்டுள்ளார்.
பவாத் அண்டாரபி என்ற அந்த பாடகர் தாலிபான்களால் வெளியே இழுத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பதிவு இட்டுள்ளார்.
ஆப்கான் தலிபான் வசமான ஆகஸ்ட் – 15 முதல் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை உலகறியும். உச்சக்கட்டமாக இன்று அந்நாட்டின் தலைசிறந்த கிராமியப் பாடகரான ‘அண்டாரிபி-ANDARABI’ அவர்கள், தனது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடுமையான சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்து இருக்க வேண்டும்.
உலக அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க வேண்டிய ஐ.நாவும் வாய்மூடி மௌனம் காக்கிறது? ஐ.நாவும் உறைந்து போய் விட்டதா?
இவ்வாறு கிருஷ்ணசாமி தனது முகநூலில் பதிவு இட்டுள்ளார்.