Connect with us

ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிமிஷா பாத்திமா என்ன ஆனார்

Latest News

ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிமிஷா பாத்திமா என்ன ஆனார்

ஆப்கானிஸ்தானில் இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தற்போது தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்துள்ளனர். இதனால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கன் சிறைகளில் இருந்த ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளையும் அவர்கள் விடுதலை செய்து வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமாவையும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுடன் சேர்த்து தாலிபான்கள் விடுவித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமா இந்துவாக இருந்த அவர் பின்னர் மதம் மாறி தனது கணவருடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்தார். ஆப்கனில் இருந்த போது அவரது கணவர் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.

இப்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிமிஷா பாத்திமா என்ன ஆனார் என தெரியவில்லை நிமிஷாவை இந்தியா கொண்டு வர வேண்டும் என அவரது தாய் கூறி வருகிறார்.

எனது மகள் நிமிஷாவையும், அவரது ஐந்து வயது மகளையும் விடுதலை செய்துவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு உதவ வேண்டும் என அவரது தாயார் கூறியுள்ளார்.

பாருங்க:  குறைந்து விட்ட அம்பாஸ்டர் கார் பார்த்து வியந்த டிவி பிரபலம்

More in Latest News

To Top