Latest News
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்
கடந்த 2000 ஆண்டுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நகரம் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டது எல்லா அடிப்படை உரிமைகளும் இங்கு மறுக்கப்பட்டது.
பெண்கள் கல்வி கற்க மற்ற கலை இலக்கியம் என எதிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த ஓசாமாவை பிடிக்க அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா படைகள் முழு வீச்சில் ஆப்கானிஸ்தானுக்கு ஒத்துழைத்தன. இதனால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கூடாரங்கள் அழிக்கப்பட்டு புதிய மக்களாட்சி மலர்ந்தது.
இந்நிலையில் அமெரிக்க படைகள் முழுவதும் விலக்கி கொள்ளப்பட்டு விட்டதால் தற்போது தாலிபான்கள் கடுமையாக போர் புரிந்து ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
இப்போது இடைக்கால அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.