Published
12 months agoon
ஆப்கானிஸ்தானில் மக்களாட்சியை அகற்றிவிட்டு தாலிபான்கள் மீண்டும் சில மாதங்களுக்கு முன் ஆட்சியை கைப்பற்றினர்.
இதனால் பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
6ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது, விமானத்தில் செல்லும்போது கணவர் உடன் செல்ல வேண்டும், என பல கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய கட்டுப்பாடாக ஆண்களும் பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்வதை தடை செய்துள்ளனர். அதன்படி, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு புதன் முதல் சனி வரையிலான தினங்களில் ஆண்கள் மட்டும் செல்லலாம். வாரத்தின் பிற்பகுதியில் பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளனர். இப்படி தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக நாடுகளை கவலை அடையச் செய்துள்ளன.