Connect with us

அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுசெயலாளர் ஆக்குவோம்- டிடிவி தினகரன்

Latest News

அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுசெயலாளர் ஆக்குவோம்- டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்  மதுரையில் நேற்று அளித்த பேட்டி:
ஜெயலலிதா விரும்பி சென்று வந்த இடம் கொடநாடு. இங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான  குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாவற்றிலும் ஆளுங்கட்சியை குறை சொல்ல வேண்டியதில்லை. முசிறியில் சசிகலா வருகைக்காக அமமுக நிர்வாகிகள், அதிமுக பேனர் மற்றும் கொடிகளை வைத்து வரவேற்ற நிலையில் அவர்கள் நீக்கப்பட்டனர். அது சசிகலாவை வரவேற்றதற்காக நீக்கவில்லை. அதிமுகவை மீட்டெடுத்து, சசிகலாவை அதன் பொதுச்செயலாளராக அமர்த்துவோம்.

கடந்த கால தேர்தல் தோல்விகளை கடந்து மக்களின் ஆதரவோடு அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகளை செய்கிறோம். சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி மேல்முறையீடு செய்வார்.  அதிமுகவை கைப்பற்றுவது யானைப்படை, குதிரைப்படையோடு சென்று கைப்பற்றுவதல்ல. ஜனநாயக முறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம். இது கைப்பற்றுவதல்ல. இழந்ததை மீட்டெடுப்பது என்றார்.

பாருங்க:  பாண்டிராஜ் சூர்யா பட அப்டேட்

More in Latest News

To Top