Tamil Flash News
9 இடங்களில் முன்னிலை – தமிழகத்தில் தொடரும் அதிமுக ஆட்சி
சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 38 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றதோடு, காலியாக இருந்த 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் கடந்த 18, மே 19ம் தேதிகளில் நடைபெற்றது.
மே 23ம் தேதியான இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், மக்களவை தேர்தலில் அதிமுக கோட்டை விட்டது. தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியை சேர்த்து திமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் முன்னணியில் இருக்கின்றன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 5 எம்.எல்.ஏக்களே தேவைப்பட்ட நிலையில், 9 இடங்களில் முன்னிலை வகிப்பதால் அதிமுக ஆட்சி பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 2 வருடத்திற்கு தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.