Latest News
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் மதுசூதனன். கழகத்தின் மூத்த உறுப்பினரான இவர் இவர் 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்.
சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வரும் மதுசூதனனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளார்.