Published
2 years agoon
4 ஆண்டு சிறைவாசத்தை முடித்து இன்று சென்னை திரும்பும் சசிகலாவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா ஆதரவாளர்களால் ஏதும் பிரச்சினை ஏற்படுமோ என பரபரப்பில் அதிமுக சம்பந்தமான அனைத்து இடத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக அதிமுக தலைமை அலுவலகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சசிகலா பெங்களூருவை விட்டு கிளம்புகின்றபோதே அதிமுக கொடியுடனே கிளம்பி இருப்பதால் பரபரப்பு அதிகமாகியுள்ளது.