நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு-அரசியல் பரபரப்பு

15

கடந்த 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி, எடப்பாடி அணி என மூன்றாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. பின்பு பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி அணியும் இணைந்தனர்.

அதிமுகவின் பொறுப்புகளை கைப்பற்றினர். பன்னீர்செல்வம் துணை முதல்வராக உள்ளார். எடப்பாடி முதல்வராக உள்ளார்.

மூன்று வருடத்துக்கும் மேலாக சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் சமீப காலமாக பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளர் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கின்றனர்.

தேனியில் நேற்றும் கூட வருங்கால முதல்வரே என நீளமான பேனர் அடித்து அதை நீண்ட தூரம் பிடித்திருந்தனர்.

தற்போது எடப்பாடி முதல்வரா? பன்னீர்செல்வம் முதல்வரா என வலுவான சண்டை எழுந்துள்ளது. எனினும் இது குறித்து நாளை கூடி விவாதித்து இறுதியாக ஒரு மனதாக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

பாருங்க:  இளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய டிக்டாக் - நகையுடன் தப்பி ஓட்டம்