Tamil Flash News
பாமகவிற்கு 7 தொகுதிகள் – அதிமுகவுடன் கூட்டணி உறுதி
அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் முடிவடைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து தீவிரமாக பேசி வருகின்றன.
திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகி விட்டது. அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணியும் விரைவில் உறுதியாகவுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் இணையவுள்ளது.
இந்நிலையில், அதிமுக, பாமக உடனான பேச்சுவார்த்தை இன்று காலை முடிவுக்கு வந்தது. முடிவில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்தார். மேலும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் பாமகவிற்கு ஒதுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.