திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அதிமுக தொண்டர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பலன்பெற்ற அதிமுக தொண்டர் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘ கு.தங்கராஜ் ஆகிய நான் மரியாதையுடனும், வணக்கத்துடனும் எழுதிய வாழ்த்து மடல். தாங்கள் செய்த வா ஒன்றிணைவோம் என்ற திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் ஒரு அதிமுக உறுப்பினர். ஆனால், தற்போது அதை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த அரசு மக்கள் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத அரசாக உள்ளது
நீங்கள் கூறிய 5000 ரூபாய் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. இந்த கட்சியில் இருந்ததற்காக வெட்கப்பட்டு, உறுப்பினர் அட்டையை கிழித்து விட்டேன். இனி என் வழி தளபதி வழியாக. ஈரோடு மாவட்டச் செயலாளர் அவர்களின் கீழ் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு தங்களின் அனுமதியும் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா மூலம் உதவி பெற்ற பல இலட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அதிமுக உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. ஒன்றிணைவோம் என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான் .திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.